இஞ்சி வெல்லம் ரிலீஸ் தேதியை அறிவித்த மணிரத்னம்!..

 
inji

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி நடித்துள்ள இஞ்சி வெல்லம் படத்தின் அடுத்த அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் எனப் படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. 

இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள மோஷன் போஸ்டரில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் உள்ளனர். மேலும், இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனவும் அறிவித்துள்ளனர். 

மேலும், இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன. ஏற்கனவே செக்கச் சிவந்த வானம் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்றிய மணிரத்னம், தற்போது மீண்டும் அவருடன் இணைந்துள்ளார். 

அதுபோல சாய் பல்லவி முதன்முறையாக மணிரத்னம் இயக்கத்திலும், விஜய் சேதுபதியுடனும் நடிப்பது இப்படத்தின் மீதான எதிர்ப்பார்பை அதிகரித்துள்ளது. மேலும், இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Tags

From Around the web