மணிரத்னம் + ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணி!.. இஞ்சி வெல்லம் ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை ரிலீஸ்!..
மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி இணைந்து நடித்துள்ள இஞ்சி வெல்லம் திரைப்படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இயக்குநர் மணிரத்னம் தக் லைஃப் படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படமாக இஞ்சி வெல்லம் திரைப்படத்தை இயக்கி வருகிறார். காதலை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் இப்படம் உருவாகி வருகிறது.ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸ் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான ஆச்சி ஆச்சி பாடல் நவம்பர் 25ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. மேலும், ‘புயலிசம் பிறப்பதற்கு முன்பே தொடங்கிவிடுகிறது’ என்று ஏ.ஆர். ரஹ்மானுக்கு பில்டப் கொடுத்து பதிவிட்டுள்ளனர்.
விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான பத்தா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது சர்வதேச எம்மி விருது விழாவில் இந்தியாவின் சார்பில் பங்கேற்று கவனம் பெற்றுள்ளார். மேலும், சாய் பல்லவி நடிப்பில் ராமாயணம் மற்றும் ஓம் ஆகிய படங்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
வரும் 2027 ஜனவரி 29ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள இஞ்சி வெல்லம் படத்தின் முதல் ‘ஆச்சி ஆச்சி’ பாடல் எப்படி இருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.
