’விக்ரம்’ படம் வெளியாகி இந்தியா முழுவதும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உட்பட பலரும் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.
கமல் ஒரு போலீஸ் கமெண்டராக இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். மேலும் பகத் பாசில் போலீஸுக்கு ஸ்லீப்பர் செல்லாக நடித்திருக்கிறார். விஜய் சேதுபதி இதுவரை இல்லாத மிரட்டும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவர் தோன்றும் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.
இந்த படம் வெளியாகி ரசிகர்கள் உட்பட திரைப் பிரபலங்களையும் தாக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு ரசிகனாக லோகேஷ் கமலை சிறப்பாக செதுக்கியுள்ளார் என்றே கூறலாம். அண்மையில் நடிகை குஷ்பு இந்த படத்தை தியேட்டரில் போய் பார்த்தார்.
அவரை பேட்டியில் சந்தித்த போது கமல் சாரை இவ்வளவு நாள் கழித்து திரையில் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. அனிருத் அவரது வேலையை எப்பொழுது போல் சிறப்பாக செய்துள்ளார் என்று கூறினார். மேலும் அவர் கூறுகையில் விஜய் சேதுபதியை பார்த்தால் திட்டனும். நெகடிவ் கதாபாத்திரத்தை அந்த அளவுக்கு சிறப்பாக செய்திருக்கிறார். திரையில் அவரை பார்க்கும் போதெல்லாம் திட்டனும் போல தோன்றுகிறது என கூறினார்.
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…
நடிகர் தனுஷ்…