×

கமல் படத்தில் செம வேடத்தில் விஜய் சேதுபதி - அப்ப வில்லன் இல்லையா?.....

 
viajy sethupathi

மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ்.  கடைசியாக இவர் இயக்கிய மாஸ்டர் திரைப்படம் பல மாதங்களுக்கு பின் ரசிகர்களை தியேட்டருக்கு அழைத்து வந்தது. மேலும், தயாரிப்பாளர், வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் என எல்லோருக்கும் நல்ல வசூலை பெற்று தந்தது.

எனவே, லோகேஷ் கனகராஜ் மோஸ்ட் வாண்டட் இயக்குனர்களில் ஒருவராக மாறியுள்ளார். தற்போது விஜயை வைத்து வெற்றியை கொடுத்திருப்பதால் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக மாறியுள்ள லோகேஷ் கனகராஜ் அடுத்து கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்கிற புதிய படத்தை இயக்கவுள்ளார். 

இப்படத்தின் தலைப்பையே வித்தியாசமாக வீடியோவாக வெளியிட்டு கவனம் ஈர்த்தார். ஆனால், அதன்பின் இப்படம் டேக் ஆப் ஆகவில்லை. கமல்ஹாசன் தேர்தலில் பிஸியாக விட கிணற்றில் விழுந்த கல்லாக இப்படம் நின்று போனது.

தற்போது தேர்தல் முடிந்துவிட்டதால் இப்படத்தில் கவனம் செலுத்தும் கமல்ஹாசன் மொத்தமாக 45 நாட்கள் தொடர் கால்ஷூட் கொடுத்துள்ளாராம். மேலும், கதையில் பல மாற்றங்களையும் லோகேஷ் கனகராஜிடம் அவர் கூறி வருவதாக செய்திகள் வெளியானது.

fazil

மேலும், இப்படத்தில் வில்லனாக ஃபகத் பாசில் நடிப்பதாகவும், விஜய் சேதுபதி நடிப்பதாகவும் மாறி மாறி செய்திகள் வெளிவந்தது. தற்போது அதுபற்றிய குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. இப்படத்தில் வில்லனாக நடிப்பது பகத் பாசில்தான். ஆனால், படம் முழுவதும் கமலுடனயே வரும் ஒரு வேடத்தில்தான் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளாராம். 

விஜய் சேதுபதி தற்போது பல திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர்களில் ஒருவர். இன்னும் 3 வருடங்களுக்கு எந்த புதிய படத்திலும் நடிக்க முடியாதபடி கால்ஷிட் புல்லாக இருக்கிறது. ஆனாலும், கமல் படத்திற்காக தேதிகளை ஒதுக்கி நடிக்க கொடுக்க முன்வந்துள்ளார். நீண்ட நாட்களாக நடந்து வந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்து தற்போது விஜய் சேதுபதி நடிப்பது உறுதியாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News