×

மீண்டும் மாநில அரசை கடுப்பேற்றும் விஜய்சேதுபதி: பரபரப்பு தகவல் 

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி சமீபத்தில் ’போய் வேற வேலை இருந்தா பாருங்கடா’ என்று போட்ட ட்வீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது அவர் கிறிஸ்துவ மத பிரச்சாரத்தில் மறைமுகமாக செயல்படுவதாகவும் கோடிக்கணக்கான பணத்தை அவர் மதமாற்றத்திற்கு பயன்படுத்த உதவி செய்வதாகவும் எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அவர் இந்த டோடை பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது 

 

இந்த நிலையில் தற்போது அவர் நடித்து வரும் ’லாபம்’ திரைப்படத்தில் விவசாயிகளுக்காக போராடும் ஒரு கேரக்டரில் விஜய்சேதுபதி நடித்து வருகிறார். இந்த படத்தில் இடம் பெற்றுள்ள பல வசனங்கள் மத்திய மாநில அரசுகளை தாக்கும் வகையில் இருப்பதாகவும் இதனால் இந்த படம் வெளிவந்தவுடன் பெரும் பிரச்சனையை சந்திக்கும் என்றும் கூறபடுகிறது.

ஏற்கனவே இயக்குநர் எஸ்பி ஜனநாதன் பல புரட்சிகரமான கருத்துக்களை தனது படத்தில் வைப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விஜய்சேதுபதி இந்த படத்தில் அரசுக்கு எதிரான வசனங்களை அதிகப்படுத்த கூறியதாகவும் இதனால் இந்த படத்தில் காரசாரமான வசனம் இடம் பெற்றிருப்பதாகவும் தெரிகிறது. விஜய்யை அடுத்து விஜய் சேதுபதியும் தனது படங்களில் அரசுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து உள்ளதால் இந்த படமும் பிரச்சனையை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web

Trending Videos

Tamilnadu News