×

என்ன குக் வித் கோமாளிக்கு போட்டியா... கலக்கும் விஜய் சேதுபதி!

தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் வேட்டியை மடித்துகட்டி செம்ம மாஸ் ஆக இருக்கிறார். 

 
87f3c57f-6c27-4db4-8a2d-34eee3ece2b8

2010ஆம் ஆண்டு வெளியான தென்மேற்கு பருவக்காற்று மூலம் ஹீரோவான விஜய் சேதுபதி இன்று தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக வளர்ந்துள்ளார். அந்த படத்திற்கு முன்னால் குறும்படங்களில் நடித்து மற்றும் திரைப்படங்களில் அங்க அங்க சில காட்சிகளில் தோன்றி, அதன்பின் நல்ல கதையம்சம் உள்ள படங்களாக நடித்து இன்று மலை போல் உயர்ந்து நிற்கிறார்.

“நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் இல்லையென்றால் நடிக்கமாட்டேன்” என்று இல்லாமல் ஹீரோ, வில்லன், துணை நடிகர் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை சிறப்பாக செய்வதால், மக்கள் அவரை கொண்டாடுகிறார்கள். 

மேலும் அவர் பேசும்பொழுது நிறையபேருக்கு அது உந்துதலாகவும் மோட்டிவேஷனலாகவும் இருப்பதால் அவரை இன்னும் அதிக பேருக்கு பிடித்துப் போகிறது. மாஸ்டர் படத்திற்குப் பின் குழந்தைகளுக்கும் பிடித்த ஒருவராக மாறிவிட்டார்.

இந்நிலையில் தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்துள் சமீபத்தில் செம்ம குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த வீடியோ இன்றுவரை சமூகவலைத்தளங்களில் பயங்கர வைரலாக பரவி வருகிறது. 

இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் வேட்டியை மடித்துகட்டி செம்ம மாஸ் ஆக இருக்கிறார். இந்த புரோமோவை பார்த்தவர்கள் சிலர், “இது Cook With Comali Copy-ஓ?” என்று யோசிக்கிறீர்கள்.
 

From around the web

Trending Videos

Tamilnadu News