×

சமையல் நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராகும் விஜய் சேதுபதி... கடுப்பில் குக் வித் கோமாளி ரசிகர்கள்

சன் டிவியில் பிரம்மாண்டமாக தயாராக இருக்கும் ஒரு சமையல் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி தொகுப்பாளராக இருக்கிறாராம்.
 
சமையல் நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராகும் விஜய் சேதுபதி... கடுப்பில் குக் வித் கோமாளி ரசிகர்கள்

ஹீரோ, குணச்சித்திர நடிகர் என வெரைட்டி காட்டி வந்த விஜய் சேதுபதி, விஜய்யின் மாஸ்டர் படத்தில் வில்லன் அவதாரம் எடுத்தார். பவானி கேரக்டரில் மாஸ் காட்டிய விஜய் சேதுபதி கதாபாத்திரம் அப்ளாஸ் அள்ளியது. அந்த கேரக்டர் விஜய் சேதுபதி பல்வேறு புதிய வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுத்திருக்கிறது. தொடர்ந்து, பாலிவுட் துவங்கி எல்லா மொழிகளிலும் ரவுண்ட் கட்டி வருகிறார் மக்கள் செல்வன். ஒரு நாளைக்கு சம்பளமாக ஒரு கோடி வரை வாங்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

இந்நிலையில், பல வாய்ப்புகளை கையில் வைத்திருக்கும் விசே மீண்டும் தொகுப்பாளராக சன் டிவியில் களமிறங்க இருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் தயாரிப்பு நிறுவனமான எண்டோமால் சைன் இந்த நிகழ்ச்சியை தயாரிக்கிறது. சமையல் நிகழ்ச்சியான இதை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு இருக்கிறார்களாம். குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பே இந்த முடிவு என்கிறது தொலைக்காட்சி வட்டாரம். இது கோமாளி நிகழ்ச்சியின் டிஆர்பியை அசைத்து பார்க்குமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
 

From around the web

Trending Videos

Tamilnadu News