×

ஆல் இந்தியா ஸ்டாராக விஜய் சேதுபதி!... 5 மொழிகளில் வெளியாகும் ‘கணவர் பெயர் ரணசிங்கம்’..

 

வித்தியாசமான கதைகளங்களில் தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் விஜய் சேதுபதி. சிறு சிறு வேடங்களில் தலை காட்டி தற்போது முன்னணி கதாநாயகனாக நடித்து வருகிறார். தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கும் அளவுக்கு கைவசம் நிறைய படங்களை வைத்துள்ளார்.

மாஸ்டர் திரைப்படத்திலும் வில்லனாக நடித்துள்ளார். ஆனால், அத்திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை. அதேபோல், கணவர் பெயர் ரணசிங்கம் படத்திலும் அவர் நடித்து முடித்துவிட்டார். 

இத்திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது. அதேநேரம், இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம்,மலையாளம் என 5 மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகவுள்ளதாம். எனவே, விஜய் சேதுபதி ஆல் இந்தியா ஸ்டாராகா உருவாகி வருகிறார் என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News