அட்லீ தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் பத்தா ஃபர்ஸ்ட் லுக்!

 
Baththa

'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சீதக்காதி' படங்களுக்கு பிறகு 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி - இயக்குநர் பாலாஜி தரணிதரன் காம்பினேஷனில் உருவாகி வரும் மூன்றாவது படம் 'VJS 56'.

இதனாலேயே இப்படத்தின் மீது ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. இதை 'ஸ்டார் ஸ்டுடியோஸ் 18 - சினி1 ஸ்டுடியோஸ்' ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இயக்குநர் அட்லீயின் 'ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ்' நிறுவனம் தயாரிக்கிறது.

இதில் ஹீரோயினாக லிஜோமோல் ஜோஸ் நடிக்கிறார். இதற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

தற்போது, இந்த படத்துக்கு 'பத்தா' என டைட்டில் வைத்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் ரிலீஸ் செய்துள்ளனர். படத்தை வருகிற அக்டோபர் 1-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

From Around the web