விஜய் சேதுபதியின் முதல் பாலிவுட் படம் இதுதான்... வெளியான வைரல் புகைப்படம்

தமிழ் சினிமாவில் சின்ன கதாபாத்திரத்தின் மூலம் எண்ட்ரி கொடுத்தாலும், இன்றைய தேதியில் கோலிவுட்டின் அதிக படங்கள் நடிக்கும் ஒரே நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி தான். கிடைக்கும் வாய்ப்பை எல்லாம் பயன்படுத்தி வருகிறார். தொடர்ந்து விஜயின் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்ததையடுத்து, அவருக்கான ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்தது. இது அவருக்கு பல மொழி வாய்ப்பையும் பெற்று தந்தது.
தொடர்ந்து பாலிவுட்டில் பல வாய்ப்புகள் அவருக்கு வருவதாக தகவல்கள் வெளியானது. அதை உறுதிப்படுத்தும் விதமாக, மும்பைக்கார் படத்தில் விஜய் சேதுபதியின் லுக் வெளியாகி இருக்கிறது. இது தமிழில் வெளியான மாநகரம் படத்தின் ரீமேக் எனக் கூறப்படுகிறது. இதில், தமிழில் முனிஸ்காந்த் நடித்த கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தெரிகிறது. செம ஸ்டைலாக சூட் அணிந்தபடி கையில் துப்பாக்கியுடன் இருக்கும் விஜய் சேதுபதியின் புகைப்படம் படு வைரலாகி வருகிறது. இப்படத்தினை ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கி வருகிறார்.
இப்படம் மட்டுமல்லாது, கிஷோர் பாண்டுரங் இயக்கும் காந்தி டாக்ஸ், ஸ்ரீராம் ராகவன் இயக்கும் மெரி கிறிஸ்துமஸ், ஷாஹித் கபூருடன் வெப் சீரிஸ் ஒன்றிலும் விஜய் சேதுபதி நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.