விஜய் அரசியல்.. எனக்கு டைம் இல்ல... வேலை இருக்கு.. விஜய் சேதுபதி ஓப்பன்...

 
vijay sethupathi


நடிகராக இருந்த விஜய் இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கினார். 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு அவரின் கட்சி 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதன்பின் திமுக கூட்டணியில் இருந்த அரசியல் கட்சிகளின் ஆதரவை பெற்று விஜய் ஆட்சி அமைத்தார்.

தற்போது விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராகி ஆறு மாதங்கள் ஆகிவிட்டது. ஒருபக்கம் சில நாட்களுக்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் விஜய் சேதுபதி அந்நிகழ்ச்சியில் பேசிய சில கருத்துக்கள் முதல்வர் விஜயை விமர்சனம் செய்வது போல் இருப்பதாக தவெக ஆதரவாளர்களும், விஜய் ரசிகர்களும் புரிந்து கொண்டு விஜய் சேதுபதியை சமூகவலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்தனர்..

இதையடுத்து, விஜய் சேதுபதி பேசுவது முழுக்க முழுக்க பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர் தொடர்பானது மட்டுமே என விஜய் டிவி விளக்கம் அளித்தது. இந்நிலையில், விரைவில் டிரெய்ன் படம் வெளியாகவுள்ள நிலையில் விஜய் சேதுபதி ஊடகம் ஒன்றுக்கு பேட்டிகொடுத்தார். அப்போது, தவெக ஆட்சி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் சொன்ன விஜய் சேதுபதி ‘விஜய் சாரை எனக்கு நடிகராக தெரியும்.. அவருடன் வேலை செய்திருக்கிறேன். ஆனால் அரசியல் என்பது அவர்கள் போடும் திட்டங்களும், அதை செயல்படுத்துவதும் தான். அதை உட்கார்ந்து பார்ப்பது எனது வேலை இல்லை. எனக்கு நிறைய வேலை இருக்கிறது. அரசியல் கருத்து பேசுவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை.. ஆனால் அதை நாகரிகமாக ஏற்றுக்கொள்ளும் பக்குவம் பலருக்கும் இல்லை.. அது எந்த ஆட்சியாக இருந்தாலும் சரி.. அதேபோல் ஒரு விஷயத்தை முழுமையாக தெரிந்து கொண்டு அதை தொடர்ந்து கவனித்து வர வேண்டும்.. முழுமையாக தெரியாமல் பொதுவான கருத்துக்களை தெரிவிப்பதால் எந்த பலனும் இல்லை’ எனௌம் அவர் கூறியிருக்கிறார்.

Murugan ..
Murugan ..

5199 Articles

Murugan Manickam is an experienced digital journalist with 10 years of expertise in online news reporting. He specializes in covering cinema and political news. Con tact: mugas123@gmail.com

Tags

From Around the web