×

பல கோடிகள் சம்பளம்... 15 படங்களுக்கு அட்வான்ஸ்...விஜய்சேதுபதி மீது காண்டாகும் சக நடிகர்கள்....

 
பல கோடிகள் சம்பளம்... 15 படங்களுக்கு அட்வான்ஸ்...விஜய்சேதுபதி மீது காண்டாகும் சக நடிகர்கள்....

தமிழ் சினிமாவில் நல்ல கதபாத்திரங்களை தேர்வு செய்து தனது இயல்பான, வித்தியாசமான நடிப்பின் ரசிகர்களை கவர்ந்து முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்திருப்பவர் விஜய் சேதுபதி. இவர் நடிக்கும் திரைப்படங்களில் இவரின் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து நடிப்பதால் மற்ற நடிகர்களின் ரசிகர்களும் இவரை ரசிக்க துவங்கவிட்டனர்.

அதிலும், மாஸ்டர் படத்தில் அவர் வில்லனாக நடித்து விஜயை விட அதிகம் பேர் பெற்றார். அவர்தான் படம், விஜயை விட விஜய்சேதுபதி கதாபாத்திரம் சிறப்பாக அமைந்திருந்ததாக சினிமா விமர்சகர்களே கூறும் அளவுக்கு நடிப்பில் அசத்தியிருந்தார். இதனால் விஜயே காண்டனது தனிக்கதை.

மேலும், பல வருடங்களாகவே எப்போதும் கையில் பல படங்களை வைத்திருக்கும் நடிகராக விஜய்சேதுபதி இருந்து வருகிறார். ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என ரவுண்டி கட்டி அடித்து வருகிறார். தற்போது தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்து வருகிறார். 

தமிழில் மட்டுமின்றி மற்ற மொழிகளில் இவர் நடிக்கும் திரைப்படங்களும் ஹிட் ஆகி வருவதால் ‘மோஸ் வாண்டட்’ நடிகராக மாறியுள்ளார். எனவே, விஜய் சேதுபதி தனது சம்பளத்தை ரூ.25 கோடி ஏற்றிவிட்டாராம். ஆனாலும், அவரின் கால்ஷீட் கிடைத்தால் போதும் என தயாரிப்பாளர்கள் தவம் கிடைக்கிறார்கள்.

இந்நிலையில், இந்த கொரோனா காலத்திலும் 15 படங்களுக்கு அட்வான்ஸ் வாங்கியுள்ளாராம் விஜய் சேதுபதி. இதில் சில ஹிந்தி வெப் சீரியஸ்களும் அடக்கம். எனவே, 2 வருடஙக்ளுக்கு அவரின் கால்ஷீட் புதிய படத்திற்கு இல்லையாம். இதைப்பார்த்து சக நடிகர்கள் காண்டாகி வருகிறார்களாம்....

விஜய் சேதுபதி காட்டுல அட மழைதான்....

From around the web

Trending Videos

Tamilnadu News