நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாக இருக்கும திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இந்த திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். இவர் தான் அடுத்ததாக அஜித் படத்தை இயக்க உள்ளதால் அஜித் ரசிகர்கள் மத்தியிலும் இந்த படத்திற்கு அதிகமாக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தா நடிக்கின்றனர். முக்கோண காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கு இந்த படம். வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்த படத்தின் கதை எதும் தெரியாமல் தான் விஜய் சேதுபதி இருந்தாராம்.
காரணம் விக்னேஷ் சிவனுக்காக மட்டும் தான் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம். மேலும் அண்மையில் அவரை பேட்டி கண்ட போது இந்த படத்தில் இரண்டு பெண்களை காதல் பண்ற மாதிரி கதை இருக்கிறது, உண்மையில் யாரையாவது காதலித்திருக்கிறீர்களா? என நிரூபர் கேள்வி கேட்டார்.
அதுக்கு விஜய் சேதுபதி சற்று காண்டாகி காதலித்தேன், காதலிக்கல இத எப்படிங்க சொல்ல முடியும், பெர்சனல், பெர்சனல எதுக்கு நோண்டுரிங்க என சற்று கோபத்துடன் கேட்டார். அதுக்கு அந்த நிரூபரின் முகம் கொஞ்சமாக மாறிவிட்டது.
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…
நடிகர் தனுஷ்…