அரசன் படத்தில் இருந்து அப்பீட் ஆனாரா விஜய் சேதுபதி?.. உண்மை இதுதான்!..
நடிகர் விஜய்சேதுபதி இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் அரசன் படத்திலிருந்து விலகுவதாக வதந்திகள் பரவி வந்த நிலையில் அதற்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெயின் மற்றும் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் சாய் பல்லவியுடன் நடிக்கும் படம் என படு பிசியாக உள்ளார். மேலும் ஜெயிலர் 2 , தியாகராஜன் குமாரராஜா இயக்கும் பாக்கெட் நாவல், மிஷ்கினின் ‘பிசாசு 2’ உள்ளிட்ட படங்களும் விஜய் சேதுபதியின் லைன் அப்பில் உள்ளன. மேலும் அட்லீ தயாரிப்பில் பாலாஜி தரணீதரன் இயக்கும் ‘பத்தா’ படத்திலும் விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்தப் படம் அக்டோபர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் அரசன் படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பும் தொடங்கியதாக தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், ‘அரசன்’ படத்திற்கு விஜய் சேதுபதி கொடுத்த கால் ஷீட் நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமல் போனதாகவும், தொடர்ந்து இந்தப் படத்திற்கே முக்கியத்துவம் கொடுத்தால் தனது மற்ற படங்கள் பாதிக்கப்படும் என்பதால் அவர் விலக முடிவு செய்ததாகவும் வதந்திகல் வலம் வரத் தொடங்கின.
ஆனால், அரசன் படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகவில்லை என்கிற உறுதியான தகவல்கள் தற்போது வெளி வந்துள்ளது. ஸ்லம்டாக் 33 டெம்பிள் ரோடு படமும் விரைவில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாக காத்திருக்கிறது. அந்த படத்தை பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 1 மற்றும் 2 பாகங்களில் நடித்துள்ள விஜய் சேதுபதி, அரசன் படத்தை விட்டு விலக வாய்ப்பே இல்லை என்கின்றனர்.