×

190 பேருக்கு தாராளமாக உதவிய விஜய்சேதுபதி... வெளிவராத உண்மை

விஜய் சேதுபதி உதவி செய்தது குறித்து அறிந்த ரசிகர்கள் அவரை பாராட்டியுள்ளனர்.
 
Vijay Sethupathi_4-compressed

கொரோனா பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருக்கும் சினிமா பத்திரிகையாளர்கள் 190 பேருக்கு தலா ரூ. 1,000 கொடுத்திருக்கிறார் விஜய் சேதுபதி.

கொரோனா வைரஸ் பிரச்சனையால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவியை மற்றவர்களுக்கு செய்து வருகிறார்கள். இந்நிலையில் விஜய் சேதுபதி செய்த உதவி குறித்து தெரிய வந்துள்ளது.

அவரிடம் உதவி பெற்ற ஒருவர் இது குறித்து சமூக வலைதளத்தில் தெரிவித்தார். அதன் பிறகே விஜய் சேதுபதி சத்தமில்லாமல் செய்த காரியம் குறித்து அனைவருக்கும் தெரிய வந்தது.

விஜய் சேதுபதி உதவி செய்தது குறித்து அறிந்த ரசிகர்கள் அவரை பாராட்டியுள்ளனர். தான் யாருக்காவது உதவி செய்தால் அதை வெளியே சொல்லாதவர் விஜய் சேதுபதி என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதியின் லாபம், மாமனிதன் ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராக இருக்கின்றன. அவர் நடித்திருக்கும் துக்ளக் தர்பார், கடைசி விவசாயி ஆகிய படங்கள் ஓடிடியில் ரிலீஸாக உள்ளன.

From around the web

Trending Videos

Tamilnadu News