×

ஜோதிகாவின் சர்ச்சை பேச்சு... சூர்யாவிற்கு ஆதரவு தெரிவித்த விஜய் சேதுபதி!

சமீபத்தில் நடிகை ஜோதிகா ஒரு விருது வழங்கும் விழாவில் "கோவில்களுக்கு செலவு செய்வது போல் நாம் மருத்துவமனை, பள்ளிகளுக்கும் செய்ய வேண்டும்" என்று கூறியிருந்தார். இதனையடுத்து சிலர் அவருக்கு விரோதமாக சர்ச்சை கேள்விகளை எழுப்பினர்.

 

இந்நிலையில் இதுபற்றி அவரது கணவரும் நடிகருமான சூர்யா ஒரு நீண்ட அறிக்கையை இன்று வெளியிட்டார். அதில் "மதங்களை கடந்து மனிதமே முக்கியம் என்பதையே எங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லித்தர விரும்புகிறோம். தவறான நோக்கத்தோடு தரக்குறைவாக சிலர் அவதூறு பரப்பும் போதெல்லாம் நண்பர்கள் , நல்லோர்கள் எங்கள் துணை நிற்கிறார்கள் .

முகம் தெரியாத எத்தனையோ பேர் எங்கள் சார்பில் பதில் அளிக்கிறார்கள். ஊடகங்கள் சரியான விதத்தில் இச்சர்ச்சையை கையாண்டன. நல்ல எண்ணங்களை விதைத்து நல்ல செயல்களை அறுவடை செய்ய முடியும் என்கிற நம்பிக்கையை இவர்களே துளிர்க்கச் செய்கிறார்கள்'' என்று கூறியிருந்தார். பலரும் சூர்யாவின் இந்த அதிரடி அறிக்கைக்கு ஆதரவு அளித்து வரும் வேளையில், நடிகர் விஜய்சேதுபதி ஒரு பதிவு இட்டுள்ளார். நடிகர் சூர்யாவின் அந்த அறிக்கையை பகிர்ந்த அவர் 'சிறப்பு' என்று தலைப்பிட்டு வெளிப்படையாகவே அவருக்கு ஆதரவு அளித்துள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் அந்த டிவிட்டை கொண்டாடி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News