தற்போது தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவில் தேடப்பட்டு வரும் முக்கிய நடிகராக மாறி வருகிறார் விஜய் சேதுபதி. தமிழ் மொழியைத் தாண்டி ஹிந்தி தெலுங்கு என தனது மார்க்கெட்டை விரிவுபடுத்தி விட்டார்.
இவர், நடிப்பில் அடுத்ததாக பல படங்கள் ரெடியாகிக் கொண்டிருக்கின்றது. விஜய் சேதுபதி எப்போதும் கையில் ஏராளமான படங்களை வைத்திருப்பார்.
அந்த வகையில், காக்கா முட்டை திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த மணிகண்டன் விஜய் சேதுபதி வைத்து உருவாக்கிய ‘ஆண்டவன் கட்டளை’ திரைப்படமும் ரசிகர்களை ஈர்த்தது. இதனை தொடர்ந்து விவசாயத்தின் அருமையை உணர்த்தும் வகையில் இயக்கிய திரைப்படம் “கடைசி விவசாயி” இப்படம் நாளை வெளியாகிறது. இப்படத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர் வேடத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.
அதன்பிறகு, காத்துவாக்குல 2 காதல் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது மீண்டும் லலித் குமார் தயாரிப்பு விஜய் சேதுபதி நடிக்க உள்ளாராம் இதனை ரைட்டர் படத்தை இயக்கிய இயக்குனர் இந்த படத்தை இயக்க உள்ளாராம் விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
இதற்கு முன்னர், விஜய் சேதுபதியின் திரைபடம் என்றால் மாதம் ஒன்றும் வாரம் ஒன்றும் வெளியாகும் இது அனைவருக்கும் தெரிந்ததே. ஆம்… ஒரு வருடத்திற்கு அவ்ளோ படம் நடித்து முடிப்பார். இந்நிலையில், மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வருகிறார் விஜய் சேதுபதி. மேலும், நாளை கடைசி விவசாயி படம் வெளியாகிறது.
இதையும் படியுங்களேன்- கழுத்துமாக போட்டோவில் சிக்கிய சிவகார்த்திகேயன்.! முழு விவரம் உள்ளே.!
அடுத்ததாக, அடுத்த மாதம் காத்துவாக்குல இரண்டு காதல் திரைப்படம் வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும், இவர் நடித்து முடித்துள்ள மாமனிதன், மும்பைக்கார், இடம் பொருள் ஏவல் ரிலீஸ் ஆகாமல் கிடைப்பில் இருக்கிறது.
இதில், மாமனிதன், இடம் பொருள் ஏவல் மார்ச் மாதம் ரிலீஸ் செய்ய பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அடுத்த மும்பைக்கார் திரைப்படம் மே மாதம் வெளியாகிறது என கூறப்படுகிறது. இதனால், இந்த படத்தினை தூசி தட்டி தற்போது ரிலீஸ்க்கு தயார் ஆகிறதாம். இனி அடுத்ததடுத்த விஜய் சேதுபதியின் திரைப்படத்தை திரையரங்கில் காணலாம் என கூறப்படுகிறது.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…