பாலா இயக்கத்தில் விஜய் சேதுபதி

சேது என்ற முதல் படத்திலேயே ஆனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குனர் பாலா. தொடர்ந்து பிதாமகன், நந்தா, அவன் இவன் இறுதியாக அருண் விஜய் நடித்த வணங்கான் போன்ற படங்களை
 
vijay sethupathi with bala

சேது என்ற முதல் படத்திலேயே ஆனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குனர் பாலா. தொடர்ந்து பிதாமகன், நந்தா, அவன் இவன் இறுதியாக அருண் விஜய் நடித்த வணங்கான் போன்ற படங்களை இயக்கியுள்ளார். குறிப்பாக சூர்யா, விக்ரம் ஆகிய நடிகர்களுக்கு அடையாளத்தை கொடுத்தவர் இவர். இவரது படத்தில் நடித்தாலே சிறந்த நடிகராக உருவாகலாம் என்பது கோலிவுட் நம்பிக்கை. ஆனால் சமீபகாலமாக அவர் இயக்கிய படங்கள் கமர்சியலாக வெற்றி பெறவில்லை.

இந்த நிலையில் பாலா தற்போது அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார். இந்த முறை வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற முனைப்பில் இளைய இயக்குனர்களை தன்னுடன் இணைந்துள்ளார். அதாவது கதை விவாதத்தில் மாரி செல்வராஜ். ஏ.எல்.விஜய், கொம்பன் முத்தையா, ராஜூ முருகன் ஆகிய இயக்குனர்கள் இணைந்துள்ளனர். இதனால் இப்படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று கோலிவுட் வட்டாரங்களில் இப்போதே பேச துவங்கியுள்ளனர் .

இந்த நிலையில் பாலா இயக்கும் இந்த படத்தில் நாயகனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். ஏற்கெனவே பாலாவும் விஜய் சேதுபதியும் இது குறித்து சந்தித்து பேசியுள்ளனர். விஜய் சேதுபதி போன்ற நடிகர் பாலாவுடன் இணையும்போது  நிச்சயம் படம் வேறு லெவலில் இருக்கும் என்பது உண்மை.

From Around the web