Categories: Cinema News latest news

எனக்காக அங்க காத்ரீனா கைஃப் காத்திருக்காங்க., இயக்குனரை கடுப்பேத்திய மக்கள் செல்வன்.!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்து வெளியாக காத்திருக்கும் திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இந்த திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். இவர் தான் அடுத்ததாக அஜித் படத்தை இயக்க உள்ளதால் அஜித் ரசிகர்கள் மத்தியிலும் இந்த படத்திற்கு அதிகமாக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் சமந்தா, நயன்தாரா என பலர் நடித்துள்ளனர். இந்த படம் ஒரு நபர் ஒரே நேரத்தில் இரண்டு பேரை காதலிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. அதனால் ஏற்படும் சிக்கல்களை கலகலப்பாக கூறியுள்ளனராம்.

இந்த படத்தின் ஷூட்டிங் ஒரு சமயம் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் நடைபெற்றதாம். அப்போது, 5 நாள் அங்கு பாடல் ஷூட்டிங் நடைபெற்றதாம். ஆனால் விக்னேஷ் சிவனுக்கு கடைசி நாளில் கூடுதல் ஒரு நாள் கேட்டுள்ளாராம்.

இதையும் படியுங்களேன் – பிரியா பவானிசங்கர் தான் என் புதிய கேர்ள் ஃப்ரண்ட்.! அதிர வைத்த அந்த நடிகர்.!

ஆனால், அப்போது தான் விஜய் சேதுபதி, பாலிவுட் நடிகை கத்ரினா கைப் உடன் மெரி கிறிஸ்துமஸ் எனும் படத்தில் கமிட்டாகி இருந்தார். அந்த பட ஷூட்டிங் இருந்ததால், கூடுதல் ஒரு நாள் தர முடியாது என விஜய் சேதுபதி மறுத்துவிட்ட்டாராம்.

இதனால், பட ஷூட்டிங் எல்லாம் முடிந்து, ஒரு நாள் விஜய் சேதுபதியை அழைத்து அந்த காட்சியை விக்னேஷ் சிவன் படமாக்கினாராம். இதனை விஜய் சேதுபதியை வைத்துக்கொண்டே, இயக்குனர் விக்னேஷ் சிவன் கலகலப்பாக கூறினார்.

Manikandan
Published by
Manikandan