விஜய் சேதுபதியின் ‘குட்டி ஸ்டோரி’- லைக்ஸ் குவிக்கும் ஸ்னீக் பீக் வீடியோ
Mon, 8 Feb 2021

முன்னணி இயக்குனர்கள் இணைந்து ஒவ்வொருவரும் ஒரு குறும்படத்தை இயக்கி ஆந்தாலஜி திரைப்படங்களை இயக்கி வருகின்றனர். ஏற்கனவே கவுதம் மேனன், வெற்றிமாறன், அரவிந்த் சாமி, சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பாவ கதைகள்’ என்கிற ஆந்தாலஜி படம் வெளியானது.
இந்நிலையில், மீண்டும் ‘குட்டி ஸ்டோரி’ என்கிற தலைப்பில் ஒரு ஆந்தாலஜி திரைப்படம் உருவாகியுள்ளது. இதை கவுதம் மேனன், வெங்கட் பிரபு, விஜய் மற்றும் நலன் குமாரசாமி ஆகியோர் இயக்கியுள்ளனர். இதில், நலன்குமார சாமி இயக்கத்தில் உருவாகியுள்ள குறும்படத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இதன் ஸ்னீக் பீக் வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.