இந்த படத்தை தான் விஜய் சேதுபதியை வச்சு மணிரத்னம் ரீமேக் பண்றாரா?

 
Vijay Sethupathi Maniratnam

என்ன தான் சொந்தமாக கதை எழுதி இயக்கினாலும், சில முறை வேற மொழிகளில் நன்றாக ஹிட் அடித்த ஒரு படத்தை பார்க்கும்போது இது நல்லா இருக்கே? இதை தமிழில் எடுக்கலாமே என்று தோன்றும்.

அப்படி ஒரு சம்பவத்தை பற்றி தான் சொல்லப்போகிறேன். கோலிவுட்டில் மிகவும் புகழ் பெற்ற இயக்குநர் மணிரத்னம். இவர் இயக்கும் புது படத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி கதாநாயகன் ஆக நடிக்கிறார்.

மக்கள் செல்வனுக்கு ஜோடி சாய் பல்லவி தான். சமீபத்தில், கொல்கத்தாவில் துவங்கிய இதன் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

Crazy stupid Love

தற்போது, இந்த படம் 2011-ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படத்தின் ரீமேக் என்று கோலிவுட்டில் தண்டோரா போடுகிறார்கள். படத்தின் பெயர் 'Crazy, Stupid, Love'-ஆம்.

From Around the web