நடிகர் பால சரவணன், இவரை விஜய் டிவி கானா காணும் காலங்கள் சீரியலில் பார்த்திருப்போம். அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் சிறு சிறு காமெடி வேடங்களில் நடித்திருந்தார். அப்போது நமக்கு நன்றாக தெரிந்து இருக்கும்.
ஆனால் அவரை அண்மையில், அனைவரிடம் கொண்டு போய் சேர்த்து என்றால் அது விமல் நடிப்பில் வெளியான விலங்கு வெப் சீரிஸ் தான். அதில் இவர் நடித்திருந்த கருப்பு எனும் கான்ஸ்டபிள் கதாபாத்திரம் அவ்வளவு கட்சிதமாக இருந்தது. ‘
மிகவும் குண்டாக இருந்த பால சரவணன் தனது உடல் எடையை சுமார் 20 கிலோவிற்கும் அதிகமாக குறைத்துவிட்டார். அதன் பின்னர் தான், விலங்கு படத்தில் நடித்தார். மேலும், சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் திரைப்படதிலும் முக்கிய வேடத்தில் நடித்து முடித்துள்ளார்.
இவர் அண்மையில், ஒரு பேட்டியில் தான் நடித்த ஆரம்பகால திரைப்படம் பற்றி பேசியிருந்தார். அதில், பண்ணையாரும் பதமினியும் திரைப்படம் அவருக்கு 3வது திரைப்படமாம். அதில், பீடை எனும் கதாபாத்திரத்தில் பால சரவணன் நடித்து இருப்பார். அந்த கதாபாத்திரத்திற்கு தலை முடி மிகவும் மோசமாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தாராம் இயக்குனர்.
இதையும் படியுங்களேன் – ரிலீசுக்கு முன்பே 47 கோடி லாபம்.! பீஸ்ட் மொத்த பிசினஸ் ரிப்போர்ட் இதோ..,
அதற்காக ஷூட்டிங் முடியும் வரையில் சுமார் 55 நாட்கள் தலைக்கு குளிக்காமல் இருந்துள்ளார் பால சரவணன். ஆனால், இவ்வளவு கஷ்டப்பட்டு அந்த படத்தில் நடித்தாலும், ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதே உண்மை.
வடிவேலு ஒரு…
TVK Vijay:…
நான் கைக்கூலி…
TVK Vijay:…
TVK Vijay:…