×

மறைந்த இயக்குநரின் கடைசி படம்.... தியேட்டரில் லாபம் பார்க்க வருகிறார் விஜய் சேதுபதி

திரையரங்குகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, லாபம் திரைப்படம் செப்டம்பர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ec927b64-9999-4af3-a6ae-6da429a65ad1

றைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய படம் லாபம். படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் இருந்த போது, திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் மறைந்தார். 

கம்யூனிச சிந்தனையாளரான இயக்குநர் ஜனநாதன், லாபம் படத்தையும் அதே அடிப்படையில் இயக்கியுள்ளார். 100 ரூபாய் பொருளை 110 ரூபாய்க்கு விற்றால் அதை ஊழல் என்கிறோம். 

vjs

ஆனால், 100 ரூபாய் பொருளின் அடக்க விலைக்குள்ளேயே ஒரு ஊழல் இருக்கிறது. அது குறித்து லாபம் படத்தில் பேசியிருப்பதாக ஜனநாதன் படத்தை ஆரம்பிக்கையில் கூறியிருந்தார். லாபம் படத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன், சாய் தன்ஷிகா, கலையரசன், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

படத்திற்கு இசை டி.இமான். விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் மற்றும் இயக்குனர் ஆறுமுக குமாரின் 7சி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து லாபம் படத்தைத் தயாரித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாததால், இதன் வெளியீடு தள்ளிப்போனது. தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, லாபம் திரைப்படம் செப்டம்பர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


 


 

From around the web

Trending Videos

Tamilnadu News