விஜய் சேதுபதியின் 'ட்ரெயின்' படத்துக்கு கிரீன் சிக்னல் காட்டிய மிஷ்கின்!
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ஃபிலிம்மேக்கிங் ஸ்டைல் வைத்திருப்பவர் தான் இயக்குநர் மிஷ்கின். இவர் 'அஞ்சாதே, யுத்தம் செய், பிசாசு, துப்பறிவாளன்' போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.
இப்போது நடிப்பில் கவனம் செலுத்தி வரும் மிஷ்கினுக்கு, தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமுள்ளது. இவர் இயக்கி, முடித்து வைத்த 'ட்ரெயின்' மற்றும் 'பிசாசு 2' ஆகிய இரண்டு படங்களுமே எப்போது ரிலீஸ் ஆகும்? என்று அவரது ரசிகர்கள் வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களின் காத்திருப்புக்கு கிரீன் சிக்னல் காட்டும் வகையில் ஒரு செய்தி கிடைத்துள்ளது. ஆம்.. விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள 'ட்ரெயின்' படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகப்போகிறது.
இதில் முக்கிய வேடங்களில் நாசர், ஸ்ருதிஹாசன், நரேன், கே.எஸ்.ரவிகுமார், சம்பத் ராஜ், கலையரசன் ஆகியோர் நடித்துள்ளனர். தற்போது, இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை விஜய் டிவி கைப்பற்றியுள்ளதாக மிஷ்கினே தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
