மிஷ்கினின் 'ட்ரெயின்' படத்தின் டீசர் & ஆடியோ ரிலீஸுக்கு நாள் குறித்த விஜய் சேதுபதி!
'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, இயக்குநர் மிஷ்கின் - நடிகை ஆண்ட்ரியா கூட்டணியில் வெளியான 'பிசாசு 2' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அப்படத்தின் வேலைகள் முழுவதும் முடிவடைந்து ரிலீஸுக்காக காத்திருக்கிறது.
இதையடுத்து மக்கள் செல்வனை கதையின் நாயகனாக வைத்து மிஷ்கின் இயக்கிய படம் தான் 'ட்ரெயின்'. இந்த படத்தை 'V கிரியேஷன்ஸ்' கலைப்புலி.எஸ்.தாணு தயாரித்திருக்கிறார்.
இதில் ஸ்ருதி ஹாசன், நாசர், கே.எஸ்.ரவிகுமார், இரா தயானந்த், நரேன், ப்ரீத்தி கரன், கலையரசன், யூகி சேது ஆகியோர் முக்கிய ரோல்களில் நடித்துள்ளார்கள்.
#Train - Teaser & Audio launch on July 12, 6:30pm at PVR Satyam Cinemas!@DirectorMysskin @shrutihaasan @nasser_kameela @ksravikumardir @ira_dayanand @itsNarain @preethy_karan @KalaiActor #YugiSethu @fowziafathima @editorsriwat #TapasNayak #StreetLight @vijaytelevision… pic.twitter.com/zE68IHFO6E
— VijaySethupathi (@VijaySethuOffl) July 9, 2026
மிஷ்கினே தான் இந்த படத்துக்கு இசையமைத்திருக்கிறார். தற்போது, இதன் டீசர் & ஆடியோ வெளியீட்டு விழாவை வருகிற ஜூலை 12-ஆம் தேதி சென்னையில் உள்ள PVR சத்யம் சினிமாஸில் மாலை 6:30 மணிக்கு நடத்த திட்டமிட்டுள்ளதாக விஜய் சேதுபதி எக்ஸ் தளத்தில் அறிவித்திருக்கிறார்.
