மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி பயணிக்கும் 'ட்ரெயின்'... எதிர்பார்ப்பை எகிற வைத்த டீசர்!

 
Train teaser

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடித்துள்ள புதிய படம் தான் 'ட்ரெயின்'. இந்த படத்தை இயக்குநர் மிஷ்கின் இயக்கியிருக்கிறார்.

இதில் முக்கிய வேடங்களில் நாசர், ஸ்ருதி ஹாசன், யூகி சேது, நரேன், கே.எஸ்.ரவிகுமார், சம்பத்ராஜ், கலையரசன், இரா தயானந்த், அஜய் ரத்னம், வின்சென்ட் அசோகன், ப்ரீத்தி கரன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

இதை 'V கிரியேஷன்ஸ்' கலைப்புலி.எஸ்.தாணுவுடன் இணைந்து 'Street Light' நிறுவனம் தயாரித்துள்ளது. மிஷ்கினே இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெறுகிறது.

தற்போது, இதன் டீசரை யூடியூபில் ரிலீஸ் செய்துள்ளனர். விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web