×

தமிழ் படத்தை விட்டு வெளியேறும் விஜய் சேதுபதி... இனி மற்ற மொழிகள் தான் நடிப்பாராம்...
 

இனி தமிழ் சினிமாவை விடுத்து மற்ற மொழிகளில் தான் விஜய் சேதுபதி அதிக கவனம் செலுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 
 
 

ஹீரோ, குணச்சித்திர நடிகர் என வெரைட்டி காட்டி வந்த விஜய் சேதுபதி, விஜய்யின் மாஸ்டர் படத்தில் வில்லன் அவதாரம் எடுத்தார். பவானி கேரக்டரில் மாஸ் காட்டிய விஜய் சேதுபதி கதாபாத்திரம் அப்ளாஸ் அள்ளியது. அந்த கேரக்டர் விஜய் சேதுபதி பல்வேறு புதிய வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுத்திருக்கிறது. 

இதில், லேட்டஸ்ட் நியூஸ் என்னவென்றால் பிரபாஸ் நடிக்க இருக்கும் சலார் படத்தில் அவருக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார் என்பதுதான். ஏற்கனவே தெலுங்கில் அல்லு அர்ஜூன் நடிக்கும் புஷ்பா படத்தில் வில்லனாக கமிட்டாகியிருக்கிறார் வி.சே. எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ஸ்ருதி ஹாசனுடன் இணைந்து வி.சே நடித்திருக்கும் லாபம் படம் விரைவில் ரிலீஸாகவிருக்கிறது.

இந்நிலையில், தமிழ் மொழியை விடுத்த மற்ற மொழி படங்களையே விஜய் சேதுபதி அதிகம் ஒப்புக்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மராட்டி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஆறுக்கும் அதிகமான படங்களில் கமிட் ஆகி இருக்கும் விஜய் சேதுபதி 10 நாட்களுக்கு 10 கோடி ரூபாய் சம்பளம் பேசி இருப்பதாக கூறப்படுகிறது. இதில், காத்துவாக்குல காதல் படத்தில் மட்டும் தான் ஹீரோவாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News