அட்லி தயாரிப்பில் விஜய் சேதுபதி
அட்லி தயாரிப்பில் விஜய் சேதுபதி
இந்திய சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் அட்லியும் ஒருவர்.ராஜா ராணி படத்தில் அறிமுகம் ஆன அவர் தெறி, மெர்சல், பிலில் என தொடர்ந்து விஜயை வைத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். இதையடுத்து அட்லி ஷாருக்கான் நடிப்பில் இயக்கிய ஜவான் இந்திய அளவில் அவருக்கு அடையாளத்தை பெற்று தந்தது. தற்போது அல்லு அர்ஜூன் நடிப்பில் ராகா என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்த நிலையில் டைரக்ஷனில் பிஸியாக் இருந்தாலும் படம் தயாரிப்பதிலும் அட்லி பிஸியாகவே உள்ளார். அடுத்து இவர் தனது ஏ ஃபார் ஆப்பிள் என்ற தனது நிறுவனம் சார்பில் விஜய் சேதுபதி நடிப்பில் புதிய படம் ஒன்றை தயாரிக்க உள்ளார். இந்த படத்தின் இயக்குனர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. விஜய் சேதுபதி ஏற்கெனவே அட்லி இயக்கிய தவான் படத்தில் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
