×

நான் சொதப்பிட்டேன்... 96 வெற்றி குறித்து விஜய் சேதுபதி!

நடிகர் விஜய் சேதுபதி 96 படத்தின் வெற்றியை குறித்து பேட்டி ஒன்றில் பேசினார். அவர் கூறியதாவது, "இந்த படம் இவ்வளவு பெரிய வெற்றி பெறும் என எதிர்பார்க்கவே இல்லை. 96 ராம் போல தான் என்னுடைய கேரக்டரும் நான் co-education பள்ளியில் படித்தாலும், பெண்களிடம் அதிகம் பேசியதில்லை.

 

பல நண்பர்கள் என்னிடம் கேட்பார்கள், நீ எங்களை தவிர வேறு யாருடனும் பேசுவதில்லை, நீ எப்படி சினிமாவில் நடிப்பாய்?' என்று கூட கேட்டார்கள்". 96 ஏவரேஜாக போகும் என நினைத்தேன். ஆனால்,  எதிர்பார்த்தை விட பெரிய ஹிட் அடித்தது. இருந்தாலும், இப்போதும் நான் அந்த படத்தை பார்க்கும் போது நான் அதை சொதப்பி விட்டேனோ என தோன்றும் என்றார்.

பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான 96 படம் அமோக வரவேற்பை பெற்றதோடு கலெக்ஷனிலும் கல்லா கட்டியது. இப்படத்தில் அமோக வெற்றியை கண்டு பிற மொழி திரைத்துறையினர் தங்கள் மொழிகளில் 96 படத்தை ரீமேக் செய்தது படத்திற்கு மேலும் புகழை சேர்த்து குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News