அந்த நடிகை வேணாம்... ஒரே வார்த்தையில் மறுத்த விஜய் சேதுபதி!
விஜய் சேதுபதி:
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படம் தான் உப்பென்னா. தெலுங்கில் வெளியான இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்த கீர்த்தி செட்டி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

இந்த திரைப்படத்திற்கு பிறகு கீர்த்தி செட்டி விஜய் சேதுபதியுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்த போது விஜய் சேதுபதி அவருடன் ஜோடியாக நான் நடிக்க மாட்டேன் என காரராக கூறி விட்டார். அதற்கான காரணம் குறித்து சமீபத்தில் பேசி இருக்கும் விஜய் சேதுபதி... நான் இப்படத்தின் கிளைமாக்ஸ் சீன் போது கீர்த்தி செட்டியுடன் நடித்தேன் .
அந்த நடிகை வேணாம்...
அப்போது அந்த பொண்ணுக்கு பர்த்டே வேற ... அவங்க ரொம்ப கூச்ச சுபாவம் கொண்டு என்னுடன் பயந்தபடி பேசுவார். அப்போது நான் சொன்னேன்.... என்னை உன் அப்பாவாக நினைத்துக் கொள். உன் வயசு தான் என்னோட பையனுக்கும் இருக்கும். அதனால நான் ஒரு அப்பாவா நினைச்சு என்கூட பழகு என்று நான் சொல்லிவிட்டேன்.

இப்படி சொன்ன பிறகு அந்த பெண்ணுடன் நான் எப்படி ஜோடியாக நடிப்பது? அதனால் தான் அவருடன் ஜோடியாக நடிக்க மாட்டேன் என்று கூறி மறுத்து விட்டேன் என விஜய் சேதுபதி கூறினார். இந்த கேள்விப்பட்ட ரசிகர்கள் அண்ணே இது ரொம்ப தப்பு அண்ணே.... படம் வேற நிஜ வாழ்க்கை வேற... அப்படி பார்த்தா முத்து வீரா, எஜமான் போன்ற படங்களில் மீனா - ரஜினி ஜோடியாவே நடிச்சிருக்கவே முடியாது எனக்கூறி அவருக்கு அட்வைஸ் செய்து வருகிறார்கள்.
