Categories: Cinema News latest news

பாய்ஸ் பட ஆடிஷனில் நிராகரிக்கப்பட்ட விஜய் சேதுபதி… சுவாரஸ்ய பின்னணி

தமிழ் சினிமாவின் ஹிட் கதாநாயகனாக விஜய் சேதுபதி வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த சமயத்தில் நடைபெற்ற சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

பெரும்பாலும் சிலருக்கு தான் வாய்ப்புகள் சரியாக அமைந்து அவர்களை ஒரு லெவலில் கொண்டு செல்லும். அப்படி ஒரு ஆள் தான் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. ஒரு காலத்தில் புதுப்பேட்டை படத்தில் மூளையில் சில காட்சிகளில் வந்து சென்றவர். தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகன். அதுமட்டுமல்லாது, தமிழ் சினிமாவின் மாஸ் கதாநாயகர்களின் வில்லன் மெட்டிரியல் என பன்முகம் காட்டி வருகிறார்.

விஜய் சேதுபதி படித்து முடித்துவிட்டு வெளிநாட்டில் வேலைக்கு சென்றாராம். அப்போது கூட தனது சினிமா ஆர்வத்தை விடாமல் தொடர்ந்து ஆடிஷன் எப்படி நடக்கிறது. என்ன படங்கள் வெளிவருகிறது என கோலிவுட்டின் அப்டேட்களை தனது கண்ணசைவில் வைத்து இருந்தார்.

அந்த சமயத்தில், சங்கர் இயக்கத்தில் பாய்ஸ் படத்திற்கும் ஆடிஷன் நடைபெற்றது. பாய்ஸ் படத்தின் முன்னணி கதாபாத்திரங்களான 5 பாய்ஸிற்கும் ஆட்களை ஷங்கர் மும்முரமாக தேடி இருக்கிறார். அப்பொழுது, விஜய் சேதுபதியும் பாய்ஸ் ஆடிஷனில் கலந்து கொண்டதாக தகவல்கள் கசிந்துள்ளது. ஆனால், அவரின் உருவம் அப்படத்தின் கதாபாத்திரங்களுக்கு ஒத்துப்போகாத நிலையில் நிராகரிக்கப்பட்டு இருக்கிறார்.

காலங்கள் உருண்டோடிய நிலையில், தற்போது ஷங்கரின் மாபெரும் படமான இந்தியன்2 படத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Manikandan
Published by
Manikandan