Categories: latest news television

அடங்கப்பா!. பிக்பாஸை தொகுத்து வழங்க விஜய் சேதுபதிக்கு இத்தனை கோடி சம்பளமா?

Vijay Sethupathi: தமிழ் பிக்பாஸின் இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருப்பது அனைவருக்கும் தெரிந்த சேதிதான். ஆனால் அதுக்கு அவருக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் சம்பளம்தான் வாய் பிளக்க வைக்கிறது.

கோலிவுட்டில் தொடர்ந்து வளர்ந்து வந்தவர் விஜய்சேதுபதி. ஒரே வருடத்தில் ஐந்து படம் வரை நடித்து வந்தார். கொடி கட்டி பறந்த சமயத்தில் முன்னணி ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்தார். அதில் அவரின் ஹீரோ மார்க்கெட் காலை வாரியது.

இதையும் படிங்க: ரியல் மங்காத்தா ஆடுனது நம்ம வெங்கட் பிரபுதான்… கோட் படத்தின் Honest Review

தற்போது அவர் நடிப்பில் உருவாகி வெளிவந்த ஹீரோ படங்கள் எதுவும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. மகாராஜா திரைப்படம் மட்டுமே பல வருடம் கழித்து அவருக்கு ஹிட் படமாக அமைந்துள்ளது. இதனால் கோலிவுட்டில் தன்னுடைய இடத்தினை பிடிக்க ஒரு ஸ்கெட்ச் விஜய் சேதுபதி போட்டுவிட்டார்.

முதலில் வில்லனாக இனி நடிக்க போவதில்லை என அறிவித்தார். அதைதொடர்ந்து பிக்பாஸ் தமிழின் எட்டாவது சீசனை தொகுத்து வழங்க முடிவெடுத்து இருக்கிறார். அது கிசுகிசுப்பாக கூறாப்பட்ட நிலையில் நேற்று அதிகாரப்பூர்வமாக புரோமோ வெளியிட்டது விஜய்டிவி.

இதையும் படிங்க: ஐஸ்வர்யா ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் போல நான் இல்ல.. ஓபனாக பேசிட்டாரே!…

இந்நிலையில் இந்த சீசனை தொகுத்து வழங்க விஜய் சேதுபதிக்கு 50 கோடி வரை சம்பளமாக பேசப்பட்டு இருக்கிறதாம்.  இதற்கு முன் பிக் பாஸ் தமிழ் தொகுத்து வழங்கிய கமல்ஹாசனுக்கு 120 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது,

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily