Categories: Cinema News latest news

விஜய் சேதுபதி மகன் சூர்யாவின் பீனிக்ஸ் டீசர் பார்த்தீங்களா?.. அனல் அரசு சும்மா மிரட்டியிருக்காரே!..

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா ஹீரோவாக நடித்துள்ள ’பீனிக்ஸ் வீழான்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அப்பா வேற நான் வேற என படத்தின் பூஜையின் போது சூர்யா பேசிய நிலையில், நேற்று தனது தந்தையை வைத்து படத்திற்கான புரமோஷனை ஆரம்பித்து விட்டார் சூர்யா.

சூர்யா விஜய் சேதுபதி என பெயர் போட்டுக் கொள்ள மாட்டேன் என்றும் சூர்யா என்கிற பெயரில் தான் நடிப்பேன் என்றும் உறுதியாக உள்ளார். ஸ்டன்ட் இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு ’பீனிக்ஸ் வீழான்’ என பெயர் வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:  கல்யாணத்தில் கலக்கல் போஸ் கொடுத்த நிவேதா பெத்துராஜ்!.. ‘அண்ணியார்’ என குவியும் கமெண்ட்ஸ்!..

விஜய் சேதுபதியுடன் இணைந்து விக்ரம் வேதா படத்தில் நடித்த வரலட்சுமி சரத்குமார் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சூர்யாவுக்கு அம்மாவாக தேவதர்ஷினி நடித்துள்ளார் என தெரிகிறது. பாக்ஸிங் சாம்பியனாகவும், சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் கைதியாகவும் சூர்யா செல்லும் காட்சிகள் டீசரில் இடம்பெற்றுள்ளன.

ஏகப்பட்ட பிரபல நடிகர்கள் நடித்துள்ள இந்த படத்தின் டீசரை நடிகர் விஜய் சேதுபதி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். விஜய் சேதுபதியை போலவே சூர்யாவும் நல்ல நடிகராக வருவார் என தெரிகிறது. முதல் படத்திலேயே ஆக்‌ஷனில் தெறிக்க விட்டுள்ளார். மேலும், வசன உச்சரிப்பு, நடிப்பு என அனைத்துமே டீசரில் வெளிக்காட்டியிருப்பது சிறப்பு.

இதையும் படிங்க:  கனகா நிலைமை இப்படி மோசமா போனதுக்கு காரணமே இவங்க தானா?.. புட்டு புட்டு வைத்த பிரபலம்!..

சாம் சி.எஸ். இசையில் சூர்யா விஜய் சேதுபதிக்கு பிஜிஎம் எல்லாம் தரமாக போடப்பட்டிருக்கிறது. நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அப்பா ஏன் டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார் என்கிற கேள்விக்கு தந்தையர் தின சர்ப்ரைஸ் என சூர்யா பதில் அளித்திருந்தார். நடிகர் சூர்யாவுக்கும் இனிமேல் விஜய் சேதுபதி மகன் சூர்யாவுக்கும் இடையே பெயர் குழப்பம் ஏற்படாதா என்கிற கேள்விக்கு விஜய் சேதுபதி மகன் சூர்யா என்றே சொல்லுங்கள் என பதில் அளித்துள்ளார்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க..

https://x.com/VijaySethuOffl/status/1802324930417090634

 

Saranya M
Published by
Saranya M