×

விஜய் சார்னாலதான படம் இப்படி வந்திருக்கு... தேவையில்லாத கேள்வி... சூடான விஜய் சேதுபதி

விஜய் நடித்த மாஸ்டர் படம் குறித்த கேள்வியால் நடிகர் விஜய் சேதுபதி சூடாகப் பதிலளித்தார். 
 

விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்திருந்த மாஸ்டர் படம் பொங்கலையொட்டி தியேட்டர்களில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. கொரோனாவுக்குப் பின்னர் தியேட்டர்களை நோக்கி ஆடியன்ஸை சுண்டி இழுத்திருக்கும் மாஸ்டர் 200 கோடி ரூபாய் வசூல் கிளப்பிலும் இணைந்திருக்கிறது. 


படத்தில் ஹீரோ விஜய்யை விட வில்லன் விஜய் சேதுபதிக்கே அதிக ஸ்பேஸ் கொடுக்கப்பட்டதாக ஒரு தரப்பினர் சர்ச்சையைக் கிளப்பி வந்தனர். இந்த சர்ச்சைக்கு விஜய் சேதுபதியே முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விஜய் சேதுபதியிடம் இதுதொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விஜய் சேதுபதி, ``இந்தக் கேள்வியே தேவையில்லாதது. விஜய் சார்னாலதான் படம் இவ்ளோ அழகா வந்திருக்கு. அவர் இல்லாம இது நடக்காது’’ என்று சூடாகப் பதிலடி கொடுத்திருக்கிறார். 800 பட சர்ச்சை குறித்த கேள்விக்குப் பதிலளிக்க மறுத்த விஜய் சேதுபதி, செத்துப்போன பிரச்சனையை ஏன் தோண்டி எடுத்து கேள்வி கேட்கிறீங்க?. அது முடிஞ்சுபோன பிரச்சனை என்று பதிலளித்தார். 


 

From around the web

Trending Videos

Tamilnadu News