Categories: Cinema News latest news

சரி சரி நீங்க முதலில் நிறுத்துங்க.., கமல் முன்னாடியே கோபப்பட்ட விஜய் சேதுபதி.!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படத்தின் இசைவெளியீட்டு விழா தான் தற்போது வரை கோலிவுட்டில் டாக் ஆப் தி டவுன் ஆக இருக்கிறது.  அங்கு நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் தான் இன்னும் பேசு பொருளாக இருக்கிறது.

இந்த விழாவில், உலகநாயகன் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, சிலம்பரசன், அனிருத், லோகேஷ் கனகராஜ் என பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் நேற்று வெளியிடப்பட்டன.

இந்த இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களின் கரகோசத்திற்கு இடையே மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பேச வந்தார். வரும் போதே, மாஸ்டர் பட பவானி பின்னணி இசை போடப்பட்டது. ரசிகர்களின் ஆரவாரம் அதிகரித்து கொண்டே இருந்தது.

இதையும் படியுங்களேன் – எந்த நிகழ்ச்சிக்கும் வராத கவுண்டமணி இங்கு வந்ததன் காரணம் என்ன.?! நெகிழ்ச்சியூட்டும் பின்னணி இதோ..,

அப்போது வேஷ்டி சட்டையுடன் விஜய் சேதுபதி மேடை ஏறியதும், ரசிகர்களின் கரகோஷம் அரங்கமே அதிரும் வண்ணம் இருந்தது. இதனால் விஜய் சேதுபதி பேச முடியாமல் தவித்தார். உடனே சட்டெனெ, நீங்க நிறுத்துங்க. நிறுத்தினால் தான் என்னால் பேச முடியும் என கூறினார். பிறகு தான் விஜய் சேதுபதி ரசிகர்கள் கொஞ்சம் அமைதி காத்தனர்.

Manikandan
Published by
Manikandan