Connect with us
VSP3

Cinema News

விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவரும் மிரட்டலான 7 படங்கள்!… ஹீரோவா ஹிட் கொடுப்பாரா!..

எத்தனையோ நடிகர்கள் தமிழ் சினிமா உலகில் இருந்தாலும் விஜய் சேதுபதியின் நடிப்பு மட்டும் நமது நெருங்கிய நண்பர் மற்றும் பக்கத்து வீட்டு இளைஞரைப் போல மிகவும் பிரமாதமாக இருக்கும்.

இவர் நடிப்பில் 96, விக்ரம் வேதா, தர்மதுரை படங்கள் பட்டையைக் கிளப்பின. சமீபத்தில் பேட்டி ஒன்றில் அவரிடம் நிருபர் நீங்கள் எப்படி வித்தியாசமான கோணங்களில் நடிக்கிறீர்கள் எனக் கேட்டார். அதற்கு குழந்தைப் போன்ற ஒரு அப்பாவித்தனம் தான் ; காரணம் என்றார்.

மிகவும் எளிமையானவராக மட்டுமல்ல. இயல்பானவராகவும் இருக்கிறார் நடிகர் விஜய்சேதுபதி. அவரிடம் ஒருபோதும் தான் ஒரு நடிகன் என்ற பந்தாவோ, ஆணவமோ இருந்தது இல்லை. பெரும்பாலும் அவரது பேட்டி தமிழில் தான் இருக்கும். எதைச் சொன்னாலும் அவர் உணர்ந்த உணர்வுகளை அப்படியே கொட்டுவார்.

Vijay Sethupathi

Vijay Sethupathi

அவரது படங்களைப் பார்ப்பதும், அவரது பேட்டியைப் பார்ப்பதும் ரசிகனுக்கு விருந்து தான். மிகவும் பணிவானவராகவும் இருக்கிறார். அவரது எளிமையும், கூச்ச சுபாவமும் தான் அவரை ஒரு பவர்மேன் ஆக்குகிறது.

விஜய்சேதுபதி நடித்த சூப்பர் டீலக்ஸ் பெரிய அளவில் வணிகரீதியாக வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் அவரது நடிப்பு மட்டும் ரசிக்கும் அளவில் இருந்தது.

மிஸ்கின் நடிப்பில் பிசாசு 2, சூது கவ்வும் 2, விடுதலை பார்ட் 2, டிரெய்ன் , இடம்பொருள் ஏவல், மகாராஜா, காந்தி டால்க்ஸ் ஆகிய படங்கள் இந்த ஆண்டுக்குள் வர உள்ளன. இவற்றில் பிசாசு 2 மற்றும் டிரெய்ன் படங்களை மிஸ்கின் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதி விஜய் உடன் மாஸ்டர் படத்திலும், கமலுடன் விக்ரம் படத்திலும், ரஜினியுடன் பேட்ட படத்திலும் வில்லனாக நடித்து அசத்தினார். வில்லனாக அவர் நடித்த படங்கள் எல்லாமே பிளாக் பஸ்டர் ஹிட் தான். அதனால் அவருக்கு பாலிவுட்டும் சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்பு கொடுத்தது. பாலிவுட்டிலும் மெர்ரி கிறிஸ்துமஸ், பார்சி, ஜவான் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top