திரையுலகில் ஹீரோ வில்லன் அப்பா என எந்த கேரக்டர் கொடுத்தாலும் தயங்காமல் தனது முழு பங்களிப்பை அளித்து வரும் வெர்சைடைல் நடிகர் என்றால் அது நம்ம விஜய் சேதுபதி தான். உண்மையாகவே இவரின் நடிப்பை துளி கூட குறை சொல்ல முடியாது. அந்த அளவிற்கு திறமையான நடிகர்.
பல படங்களில் பிசியாக நடித்து வரும் விஜய் சேதுபதி அண்மையில் பங்கேற்ற பேட்டி ஒன்றில் மறைந்த இயக்குனர் எஸ்பி ஜனநாதன் குறித்தும், தனக்கும் இயக்குனர் ஜனநாதனுக்கும் உள்ள புகைப்பழக்கம் குறித்தும் பல விஷயங்களையும், நினைவுகளையும் மிகவும் வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார்.
அதன்படி விஜய் சேதுபதி கூறியதாவது, “ஜனா சார்க்கிட்ட நான்தான் ரொம்ப கண்டிப்பா இருந்திருக்கேன். அவர் மறைவதற்கு முன்னால் புகைப்பிடிக்க கூடாதுனு ரொம்ப கண்டிப்பேன். ஆனால் நானும் தம் அடிப்பேன். அவருக்கு 2020 ஆம் ஆண்டு ரொம்ப உடம்பு சரியில்லை. அதன் பிறகு நான் ஷூட்டிங் ஸ்பாட்ல கூட அவரை தம் அடிக்காதீங்க, உடம்ப பார்த்துக்கோங்க வாக்கிங் போங்கனு சொல்லியிருக்கேன்.
நான் வருத்தப்படுவேன்னு அவர் கம்மியா புகைப்பிடிச்சாருனு நம்புறேன். இப்படியெல்லாம் சொல்லிட்டு நான் ஓரமா போய் புகைப்பிடிச்சுட்டுதான் வருவேன். தம் அடிக்குற எல்லாருக்குமே அதை விடனும், அது ஒரு சனியன்னு தெரியும். ஆனா விட முடியலை.
ஜனா எப்பவுமே என்கிட்ட சொல்ற வார்த்தை அடுத்தடுத்த படிகளுக்கு போகனும். எனவே எடுத்து வைக்கும் அடியை பாதுகாப்பாக எடுத்து வைக்கனும் சார்னுதான் சொல்லுவாரு” என இயக்குனர் ஜனநாதன் குறித்த நினைவுகளை விஜய் சேதுபதி பகிர்ந்துள்ளார்.
வடிவேலு ஒரு…
TVK Vijay:…
நான் கைக்கூலி…
TVK Vijay:…
TVK Vijay:…