×

எனக்கு சத்தியமா தெரியாது!... பாவம் செஞ்சிட்டேன்... பட விழாவில் கதறிய விஜய்  சேதுபதி...

லாபம் திரைப்பட விழாவில் விஜய் சேதுபதி பேசிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
vijay sethupathi
ஹைலைட்ஸ்:
நான் பாவம் செய்துவிட்டது போல் உணர்கிறேன். அவருடன் நிறைய நேரம் நான் செலவழித்திருக்க வேண்டும்.

தமிழ் சினிமாவில் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் விஜய் சேதுபதி. இப்போதுள்ள ஹீரோக்களில் அதிக படங்களில் நடிப்பவர் இவர்தான். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி மற்றும் வெப் சீரியஸ் மனுஷன் அசராமல் நடித்து வருகிறார்.

மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவான லாபம் படத்தில் அவர் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசன், ஜகபதி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

laabam
laabam

இந்நிலையில், இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு மற்றும் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வு நேற்று சென்னையில் நடந்தது. இதில், லாபம் படத்தின் படப்பிடிப்பு குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

laabam
laabam

இந்த விழாவில் எஸ்.பி ஜனநாதன் பற்றி பேசிய விஜய் சேதுபதி ‘நான் பாவம் செய்துவிட்டது போல் உணர்கிறேன். அவருடன் நிறைய நேரம் நான் செலவழித்திருக்க வேண்டும். ஆனால், நான் செய்யவில்லை. காலம் இவ்வளவு கொடுமையாக இருக்கும் என நான் நினைக்கவில்லை. இப்படி நடக்கும் என தெரிந்திருந்தால் அவருடன் நிறைய நேரம் செலவழித்திருப்பேன்’ என உருக்கமாக பேசினார்.

jananathan
laabam

இயற்கை, ஈ, பேராண்மை உள்ளிட்ட புரட்சிகரமான திரைப்படங்களை இயக்கியவர் ஜனநாதன். லாபம் படத்தின் பணிகள் நடந்து கொண்டிருந்த போது மதியம் வீட்டிற்கு சாப்பிட சென்ற அவர் மயங்கி கிடந்தார். அதன்பின் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்., ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News