Categories: Cinema News latest news

விஜய் நினைத்திருந்தால் அந்த காட்சிகளை தவிர்த்திருக்கலாம்….. அவர் அப்படி செய்யவில்லை… மனம் திறந்த பிரபல நடிகர்…!

கோலிவுட்டில் டாப் நடிகராக வலம் வரும் தளபதி விஜயை பிடிக்காத நபர்களே இருக்க முடியாது. ஏனெனில் இவர் சிறந்த நடிகர் என்பதை தாண்டி ஒரு சிறந்த மனிதர் என்பது தான் நிதர்சனமான உண்மை. வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரிய கூடாது என்று ஒரு பழமொழி கூறுவார்கள் அல்லவா அதுபோல் விஜய் வெளி உலகிற்கு தெரியாமல் பல உதவிகளை செய்து வருகிறார்.

இப்படி திரையில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக வலம் வரும் விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 66 படத்தில் நடிக்க தயாராகி கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் விஜய் குறித்து பிரபல நடிகர் ஒருவர் மனம் திறந்து பேசியுள்ளார். அவர் வேறு யாருமல்ல இறுதியாக விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் அவருக்கு வில்லனாக நடித்து மிரட்டிய நடிகர் விஜய் சேதுபதி தான். இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிகர் விஜய்க்கு இணையாக பல காட்சிகளில் அவருடன் மோதி இருப்பார்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி மாஸ்டர் படம் குறித்து சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, “எந்த ஒரு முன்னணி ஹீரோவும் தன் படங்களில் மற்ற ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

vijay sethupathi

அவ்வாறு விஜய் நினைத்திருந்தால் எனக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என அவர் கூறி இருக்கலாம். ஆனால் அவர் நான் நடிக்கும் காட்சிகளை கண்டு எனக்கு ஊக்கம் அளித்தார். அவரால் தான் எனக்கு மாஸ்டர் படத்தில் அந்த அளவு முக்கியத்துவம் கிடைத்தது” என விஜய் குறித்து மிகவும் பெருமையாக கூறியுள்ளார்.

ராம் சுதன்
Published by
ராம் சுதன்