விஜய் சேதுபதியின் 'பாக்கெட் நாவல்'-ஐ படித்து முடிக்கப்போகும் தியாகராஜன் குமாரராஜா!

 
Pocket Novel

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ஃபிலிம்மேக்கிங் ஸ்டைலை வைத்திருப்பவர் தான் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா. இவரது 'ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ்' ஆகிய இரண்டு படங்களுக்குமே மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.

இவர் இயக்கத்தில் ரெடியாகி கொண்டிருக்கும் புதிய படம் தான் 'பாக்கெட் நாவல்'. இதில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் ஜோடியாக நடிக்கின்றனர். 

மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜும், பிரபல கன்னட நடிகர் ராஜ்.பி.ஷெட்டியும் நடிக்கிறார்கள். இதற்கு 'இசைஞானி' இளையராஜா தான் இசையமைத்து கொண்டிருக்கிறார், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். 

இந்த ஆண்டு (2026) பிப்ரவரி மாதம் துவங்கப்பட்ட இதன் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, இந்த படத்தின் ஷூட்டிங் இன்னும் 2 வாரங்களில் முடிவடையப் போவதாக தகவல் கிடைத்துள்ளது.

From Around the web