விஜய்சேதுபதியின் மிரட்டலான நடிப்பில் ‘உபேனா’ - புதிய பட டிரெய்லர் வீடியோ
Thu, 4 Feb 2021

விஜய்சேதுபதி தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் நடிக்க துவங்கிவிட்டார். அனைத்து மொழிகளிலும் அவருக்கு ரசிகர்கள் உருவாகிவிட்டனர். பாலிவுட்டில் சாகித் கபூர் நடிக்கும் புதிய வெப் சீரியலிஸ் நடிக்க விஜய்சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்காக அவருக்கு ரூ.55 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல், ‘உபேனா’ எனும் தெலுங்கு படத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். காதலை அடிப்படையாக கொண்ட இப்படத்தை புச்சி பாபு இயக்கியுள்ளார். அத்வைதா, பஞ்ச வைஸ்னவ் தேஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்நிலையில், உபேனா படத்தின் டிரெய்லர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.