ரஜினி சார் படம்ன்னு 'ஜெயிலர் 2'-ல நடிச்சது தப்பா போச்சே... ஹ்ரித்திக் ரோஷனால் ஃபீல் பண்ணும் விஜய் சேதுபதி!

 
Rajinikanth jailer 2 vijay sethupathi hrithik roshan

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி அடுத்தடுத்து ஒரு 10 படங்களை கைவசம் வைத்துக் கொண்டு பிஸியாக கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அப்படி இருக்கையில் நம்ம 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்துக்காக, அவரின் புதிய படமான 'ஜெயிலர் 2'-வில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்தார். இதன் முதல் பாகத்தை இயக்கிய நெல்சன் தான் இதையும் இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் 'மக்கள் செல்வன்' மட்டுமல்ல, மலையாள நடிகர் மோகன்லால், பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன், கன்னட நடிகர் ஷிவராஜ்குமார் ஆகியோரும் கெஸ்ட் ரோல்களில் நடித்துள்ளார்கள்.

சமீபத்தில், தான் ஹ்ரித்திக் ரோஷனின் காட்சிகள் படமாக்கப்பட்டது. அது ப்ளான் பண்ணதை விட அதிக நிமிடங்கள் வந்து விட்டதாம்.

இதை பார்த்த நெல்சன், ஹ்ரித்திக் ரோஷனின் காட்சிகளை குறைக்க மனமில்லாமல், ஏற்கனவே எடுத்து வைத்திருக்கும் விஜய் சேதுபதியின் காட்சிகளில் சிலவற்றை குறைத்திருக்கிறார். இதை படக்குழுவினர் மூலம் தெரிந்து கொண்ட விஜய் சேதுபதி இப்போது ரொம்ப ஃபீல் பண்ணுகிறாராம்.

From Around the web