Categories: Cinema News latest news

லியோ படத்தில் விஜய் சேதுபதி இருக்காராம்?.. ஆனால் நடிக்கலையாம்… என்னப்பா சொல்றீங்க!

“லியோ” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். மேலும் இவர்களுடன் கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், அர்ஜூன், மன்சூர் அலிகான், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மேத்யூ போன்ற பலரும் நடித்து வருகின்றனர்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கத்தில் காஷ்மீர் பகுதியில் 50 நாட்களுக்கும் மேல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. வருகிற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாகவுள்ளது. ஆதலால் மிகவும் விறுவிறுப்பாக இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

Leo

சில மாதங்களுக்கு முன்பு இத்திரைப்படத்தின் வசனகர்த்தாவான ரத்னகுமார் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அதில் “விக்ரம்” திரைப்படத்தில் சந்தனம் கதாப்பாத்திரத்தில் நடித்த விஜய் சேதுபதி அணிந்திருந்த ஓட்டை கண்ணாடியை கையில் வைத்திருந்தார். ஏற்கனவே “லியோ’ திரைப்படம் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸுக்குள் இடம்பெறுவதாக தகவல் வெளிவந்த நிலையில் இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி சந்தனம் கதாப்பாத்திரத்தின் தொடர்ச்சியாக நடிக்கிறார் என பேச்சுக்கள் அடிபட்டன.

எனினும் விஜய் சேதுபதி சமீபத்தில் அளித்த பேட்டியில், “லியோ படத்தில் நான் நடிக்கவில்லை” என தெளிவுபடுத்தியிருந்தார். இந்த நிலையில் தற்போது “லியோ’ திரைப்படம் குறித்து ஒரு சூடான தகவல் வெளிவந்துள்ளது. அதாவது “லியோ” திரைப்படத்தில் சஞ்சய் தத் கதாப்பாத்திரத்திற்கு விஜய் சேதுபதி பின்னணி குரல் கொடுக்கவுள்ளதாக ஒரு செய்து தற்போது வெளியாகியுள்ளது. ஆனால் இந்த செய்தியின் உண்மைத்தன்மை குறித்து அறியப்படவில்லை.

Arun Prasad
Published by
Arun Prasad