×

கமலால் கடுப்பில் லோகேஷ்... ஆறுதலாக வந்த விஜய் சேதுபதி... அட்ரா சக்கை..

விக்ரம் படத்தின் படப்பிடிப்புக்காக பல வாய்ப்புகளை உதறி விட்டு வெயிட் செய்து வருகிறார் லோகேஷ் கனகராஜ்.
 
 

சிறப்பான கதைக்களம் மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். தொடர்ந்து, முன்னணி நாயகர்களுக்கு இயக்குனராக வலம் வருகிறார். அடுத்து லோகேஷ் இயக்கத்தில் விக்ரம் படம் உருவாக இருந்தது. இப்படத்தில் கமல் நாயகனாக நடிக்கிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டு வைரலானது.

தொடர்ந்து, பிக்பாஸ் முடிந்ததும் படப்பிடிப்பு தொடங்கும் எனப் படக்குழு தயாராக இருந்தது. ஆனால், கமல் தற்போது வீட்டில் ஓய்வில் இருக்கிறார். தொடர்ந்து, அவர் குணமானாலும் உடனே படப்பிடிப்புக்கு செல்ல மாட்டார் எனத் தெரிகிறது. விரைவில் சட்டமன்ற தேர்தல் வர இருப்பதால் கமல் பிரச்சாரத்தில் பிஸியாக இருப்பாராம். அதனால், படத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து இன்னும் லோகேஷிற்கு எந்தவித அறிவிப்பும் வழங்கப்படவில்லையாம். இதனால், லோகேஷ் கடுப்பில் இருக்கிறார் என்கின்றனர் விவரமறிந்தவர்கள். பின்ன இருக்காத, இப்படத்திற்காக அவர் கிடைத்த பெரிய வாய்ப்புகளை எல்லாம் தட்டி கழித்து இருக்கிறார். ஏன் விஜயின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர்கள் பட்டியலில் லோகேஷ் பெயர் இருந்தும் அவராகவே வேண்டாம் எனக் கூறி இருக்கிறார். 

இதனால், கமல் வருவதற்குள் ஒரு லோ பட்ஜெட் படத்தை எடுக்க முடிவு செய்திருக்கிறார். அப்படத்தில் நாயகனாக நடிக்க விஜய் சேதுபதியுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
 

From around the web

Trending Videos

Tamilnadu News