விஜய் சேதுபதியின் பின்னணி குரலில் அசத்தும் "அண்டாவ காணோம்" டீசர்!
திமிரு படம் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்ரேயா ரெட்டி. அந்த படத்தின்போது நடிகர் விஷால் அண்ணனுட்டன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்துகொண்டார். பின்னர் திரையுலகை விட்டு விலகியிருந்த அவர் சுமார் 9 ஆண்டுகளுக்கு பின் நடித்திருக்கும் படம் அண்டாவ காணோம்.

இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அண்டா கேரக்டருக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். வேல்மதி இயக்கியுள்ள இப்படத்திற்கு அஸ்வமித்ரா இசையமைத்துள்ளார். கடந்த 2017ம் ஆண்டே வெளியாகவேண்டிய இப்படம் சில பல காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளிச்சென்றது. 2016ம் ஆண்டே இந்த படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது.
இந்நிலையில் தற்போது சுமார் 3 ஆண்டுகள் கழித்து இந்த படம் OTT தளத்தில் ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி வெளியாகவுள்ளது. இதையடுத்து படத்தின் புதிய டீசரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். இந்த டீசரில் அண்டாவாக விஜய் சேதுபதி கூறும் கதை அனைவரையும் ஈர்த்துள்ளது. மேலும், படம் நிச்சயம் பெரிய அளவில் ஹிட் அடிக்கும் என்பது இந்த டீசரே கூறுகிறது.