×

விஜய் சேதுபதியால் பாலிவுட்டில் சலசலப்பு... காரணம் கேட்டு ஜெர்க்கான கோலிவுட்

விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் வெப் சீரிஸ் ஒன்றில் பாலிவுட் ஹீரோவை விட அவருக்குக் கூடுதலாக சம்பளம் பேசப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. 
 

ஹீரோ என்றில்லாமல் வில்லன், குணச்சித்திர வேடங்கள் என பல வேடங்களில் கலக்கி வருபவர் விஜய் சேதுபதி. சமீபத்தில் விஜய்க்கு இவர் வில்லனாக நடித்திருந்த மாஸ்டர் படம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இதனால், தேசிய அளவில் பேசுபொருளாகியிருக்கிறார் வி.சே.

இதனால், அடுத்தடுத்த படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களில் நடிக்க விஜய் சேதுபதிக்கு கடும் டிமாண்ட் ஏற்பட்டிருக்கிறது. அமேசான் பிரைம் தயாரிப்பில் பிரபல இரட்டை இயக்குனர்களான ராஜ் மற்றும் டி.கே இயக்கத்தில் தயாராக இருக்கும் வெப் சீரிஸில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். பிரபல பாலிவுட் ஹீரோவான ஷாகித் கபூர் நடிக்கும் இந்த வெப் சீரிஸுக்கு `சன்னி’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது. ராஷி கண்னா இதில் ஹீரோயினாக நடிக்கிறார். இந்த சீரிஸீல் பாலிவுட் நடிகர் ஷாகித் கபூரை விட பெரும் தொகை விஜய் சேதுபதிக்கு சம்பளமாக பேசப்பட்டிருக்கிறதாம். இதுகுறித்த உறுதியான தகவல் 
வெளிவரவில்லை என்றாலும், ஹிந்தி ஊடகங்களில் இது மிகப்பெரும் பேசுபொருளாகியிருக்கிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News