×

விஜய் சேதுபதியின் படமும் ஓடிடியில் ரிலீஸ் – கடைசி நேரத்தில் டிவிஸ்ட்

விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள க பெ ரணசிங்கம் படத்தினை ஜீ 5 நிறுவனம் கைப்பற்றி ரிலீஸ் செய்ய உள்ளது.

 

விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள க பெ ரணசிங்கம் படத்தினை ஜீ 5 நிறுவனம் கைப்பற்றி ரிலீஸ் செய்ய உள்ளது.

விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் விருமாண்டி இயக்கத்தில் உருவாகியுள்ள /பெ ரணசிங்கம்என்ற திரைப்படத்தின் எல்லாப் பணிகளும் முடிந்து ரிலீஸுக்கு தயாராக இருந்த நிலையில் கொரோனா காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. படத்தின் டிரைலர் வெளியாகி பரவலான பாராட்டுகளைப் பெற்றது. திரையரங்குகள் திறப்பது எப்போது எனத் தெரியாத நிலையில் இந்த படத்தை முன்னணி ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸில் விற்க தயாரிப்பு தரப்பு சில மாதங்களாக முயற்சி செய்து வந்தது. ஆனால் பேச்சுவார்த்தை இழுபறி ஆகிக் கொண்டே வந்த நிலையில் இப்போது ஜீ 5 தளம் இந்த படத்தை ரிலிஸ் செய்ய முன்னணி நிறுவனமான ஜி 5 நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

ஏற்கனவே சூர்யா, ஜெயம் ரவி ஆகிய கதாநாயகர்கள் ஓடிடிக்கு படங்களை கொடுத்துள்ள நிலையில் இப்போது விஜய்சேதுபதியின் படமும் ரிலீஸ் ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News