×

இவ்வளவு பணம் கொடுத்தால் தான் விஜய் சேதுபதி படத்தை ஓடிடியில் பார்க்கமுடியும்!

விஜய் சேதுபதி படத்தை பார்க்க கட்டண தொகையை அறிவித்த ஜீ ப்ளக்ஸ் நிறுவனம்

 

விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் விருமாண்டி இயக்கத்தில் உருவாகியுள்ள ’க/பெ ரணசிங்கம்’ என்ற திரைப்படத்தின் எல்லாப் பணிகளும் முடிந்து ரிலீஸுக்கு தயாராக இருந்த நிலையில் கொரோனா காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டது.

படத்தின் டிரைலர் வெளியாகி பரவலான பாராட்டுகளைப் பெற்றது. திரையரங்குகள் திறப்பது எப்போது எனத் தெரியாத நிலையில் இந்த படத்தை முன்னணி ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸில் விற்க தயாரிப்பு தரப்பு சில மாதங்களாக முயற்சி செய்து வந்தது.

அதன்படி தற்ப்போது ஓடிடி மற்றும் டிடிஎச் சிலும் இப்படம் வெளியாக உள்ளது.  அக்டோபர் 2 அன்று ஜீ ப்ளெக்ஸ் சேனல் மூலமாக ஒளிபரப்பப்படவும், ஜீ5 தளத்தில் பார்க்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் ரசிகர்கள் OTT தளத்தில் இப்படத்தை பார்க்க ரூ.199 கட்டணமாக செலுத்த வேண்டும் என்று ஜீ ப்ளக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News