×

விஜய் சேதுபதியின் "மாமனிதன்" OTT -யில் ரிலீஸ்..!

விஜய் சேதுபதியின் மாமனிதன் படம் OTT தளத்தில் ரிலீஸ்

 

தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை படத்தை தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் மாமனிதன். இப்படத்துக்கு இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன்சங்கர் ராஜா ஆகிய மூன்று பேரும் சேர்ந்து இசையமைத்துள்ளனர்.

இந்த படத்துக்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் ஜி தமிழ் தொலைக்காட்சி மாமனிதன் படத்தை மிகப்பெரிய தொகை கொடுத்து படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை வாங்கியது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கினாள் படத்தின் ரிலீஸ் தள்ளி செல்வதால் OTT தளத்தில் படத்தை வெளியிடுகின்றனர்.

மாமனிதன் படக்குழுவினரும்  ஜீ 5 நிறுவனத்திடம் ஆன்லைன் தளத்தில் வெளியிடுவது குறித்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். இதற்கு அந்நிறுவனமும் சம்மதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதே போன்று விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள க/பெ ரணசிங்கம் படமும் ஜீ பிளக்ஸ் என்ற ஓடிடி தளத்தில் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News