×

விஜய் சேதுபதியின் மாஸ்டர் பேச்சு... விளாசி தள்ளிய பிக்பாஸ் காயத்ரி

நேற்று நடந்த மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் சேதுபதி கலந்துகொண்டார். மேடையில் அவர் பேசும்போது மாஸ்டர் படம் பற்றி பேசிய பிறகு பொதுவான பல விஷயங்கள் பற்றி பேசினார்.
 

முதலில் கொரோனா வைரஸிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் மனிதனை காப்பாற்ற மனிதன் தான் வருவான், மேல இருந்து ஒன்னு வராது. கொரோனா வந்தால் உறவினர்களே கூட தொட அச்சப்படுவார்கள். ஆனால் அவர்களை தொட்டு சிகிச்சை செய்யும் மருத்துவர்களுக்கு நன்றி என கூறினார்.

சாமி தன்னை காப்பாற்றிக்கொள்ளும். அதை மனிதன் காப்பாற்ற வேண்டிய அவசியம் இல்லை. சாமியை காப்பாற்றுகிறேன் என கூறும் கூட்டத்தோடு பழகாதீர்கள்" எனவும் விஜய் சேதுபதி பேசினார்.

விஜய் சேதுபதியின் இந்த கருத்துக்கு பிக் பாஸ் புகழ் காயத்ரி ரகுராம் பதிலடி கொடுத்துள்ளார். "இன்னொரு மனிதனை நம்ப வேண்டும் என நண்பருக்கு குட் லக். எந்த நம்பிக்கையையும் அழிக்க முடியாது. பல கோடி பேர் இருக்கிறார்கள் (அனைத்து மதங்களிலும்). அவர்களை நீங்கள் முட்டாள் என நினைத்தால், உங்களை நினைத்து நான் வருத்தப்படுகிறேன். மனிதர்கள் தான் பொய் சொல்வார்கள், வெறுப்பை காட்டுவார்கள். வாழ்க்கையை வடிவமைத்தது கடவுள் தான்." 

"இந்த காலத்தில் உலகத்தில் வேறொரு மனிதர் உங்களை உயர்த்தி பிடிப்பார் என எதிர்பார்த்து, உங்களுக்கு கிடைக்கும் வளர்ச்சியை நம்பி சந்தோஷப்பட்டால் அது ஜோக். அப்படி ஒருவர் செய்திருந்தால் அவர் கடவுளை பின்பற்றுவதால் செய்திருப்பார்."

"கடவுளை பின்பற்றாதவர்கள் மனதில் பல அழுக்குகளை வைத்திருப்பார்கள். மனிதர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பொய் சொல்வார்கள். அப்படி பட்ட மனிதர்களை நான் நம்பப்போவதில்லை" என காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News